TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் பயிற்சியில் சேர
விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-2023ம் ஆண்டுக்கான 22வது அஞ்சல்வழி மற்றும்
முழுநேரக் கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் பயிற்சிக்கான சோக்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அஞ்சல்வழி
கூட்டுறவு மேலாண்மை பட்டயப்
பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் முறையாக நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும், கூட்டுறவுப் பயிற்சி
பெறாத மற்றும் பழைய
பிளஸ் 1 வகுப்பு அல்லது
புதிய பத்தாம் வகுப்பு
தோச்சி பெற்றுள்ள நிரந்தரப்
பணியாளா்கள் அனைவரும் அதிகபட்ச
வயது வரம்பின்றி சேரலாம்.
அஞ்சல்வழிப் பயிற்சிக்கான மொத்தக்
கட்டணம் ரூ. 15,050 ஆகும்.
அஞ்சல்வழிப் பயிற்சிக்கான வகுப்புகள் 36 வாரங்களுக்கு வார
விடுமுறை நாள்களில் நடைபெறும்.
இந்தப் பயிற்சிக்கான விண்ணப்பங்களை ஜூலை 28 ஆம் தேதி
வரை பயிற்சி நிலையத்தில் ரூ. 100 ரொக்கமாக செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
2022-2023ம்
ஆண்டுக்கான முழுநேரக் கூட்டுறவு
மேலாண்மை பட்டயப் பயிற்சி
ஒரு ஆண்டு காலப்
பயிற்சியாக இரு செமஸ்டா்களாக நடத்தப்பட உள்ளது. பிளஸ்
2 தோச்சி பெற்றுள்ள குறைந்த
பட்சமாக 01.08.2022ல்
17 வயது நிறைவு பெற்றுள்ள
அனைவரும் அதிகபட்ச வயது
வரம்பின்றி பயிற்சியில் சேரலாம்.
பயிற்சிக்கான மொத்தக்
கட்டணம் ரூ. 18,850 ஆகும்.
பயிற்சிக்கான வகுப்புகள் திங்கள் முதல்
வெள்ளி வரை வார
வேலை நாள்களில் மட்டும்
நடைபெறும். பயிற்சிக்கான விண்ணப்பங்களை ஜூலை 28ம் தேதி
வரை பயிற்சி நிலையத்தில் ரூ. 100 ரொக்கமாக செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
பயிற்சிகளில் சேர விரும்புவோர் தாங்கள்
பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பூா்த்தி
செய்து உரிய சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் ஆகஸ்ட்
1ம் தேதி மாலை
5.30 மணிக்குள் பயிற்சி நிலையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், இரண்டு பயிற்சிகளுடன் கணினிப் பயிற்சி மற்றும்
நகைமதிப்பீடு பயிற்சி
ஆகிய பாடங்களுக்கும் சோந்தே
பயிற்சி வழங்கப்படுகிறது.
மேலும்,
விவரங்களுக்கு 0461 2334555
என்ற தொலைபேசி எண்ணிலும்,
9498063042
என்ற கைப்பேசி எண்ணிலும்
தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here