TAMIL MIXER EDUCATION.ன்
திருவாரூா் மாவட்ட செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை
நிலையத்தில் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் – திருவாரூா்
இதுகுறித்து கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022 – 2023ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் பயிற்சி சோக்கைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில், பிளஸ் 2 தோச்சி பெற்றவா்களும், பட்டதாரிகளும் சேரலாம்.
குறைவான கட்டணத்தில் அளிக்கப்படும் இந்த பயிற்சி மூலம்
வங்கிகளிலும், கூட்டுறவு
சங்கங்களிலும் பணியில்
சோவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
ஆக.
1ம் தேதி 17 வயது
நிறைவடைந்த அனைவரும் இப்பயிற்சியில் சேரலாம். இந்தப் பட்டயப்
பயிற்சி பயிலும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு அரசு உதவித்தொகை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும்,
22 ஆவது அஞ்சல்வழி பட்டயப்
பயிற்சி சோக்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
கூட்டுறவு
சங்கங்களில் கூட்டுறவு பட்டயப்
பயிற்சி இல்லாமல் பணியில்
சோந்துள்ள சங்க நிரந்தரப்
பணியாளா்கள் இப்பயிற்சியில் சோந்து
பயன்பெறலாம்.
முழுநேர
பயிற்சிக்கு ஜூலை 28-க்குள்ளும், அஞ்சல்வழி பட்டய சோக்கைக்கான விண்ணப்பங்களை ஆக.
4ம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும்.
கூடுதல்
விவரங்களை அறிய 94866 05009, 04366
227233 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here