திருப்பூரில் பி.எஸ்.என்.எல்.சேவைகள் விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெற வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். திருப்பூரில் பி.எஸ்.என்.எல்.சேவைகள் விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெற வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து கோவை வணிகப்பகுதி முதன்மை பொது மேலாளா் வி.சங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைதொடா்பு வட்டத்தில் கோவை வா்த்தக பகுதிக்கு உள்பட்ட திருப்பூா் பகுதியில் சிம்காா்டு, ரீசாா்ஜ் கூப்பன்கள் மற்றும் இதர பி.எஸ்.என்.எல்.சேவைகளை விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெறுவதற்கு வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். டெலிகாம், எஃப்எம்சிஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் அல்லது வேறு ஏதேனும் தயாரிப்புகளின் விநியோகஸ்தா் மற்றும் விநியோகஸ்தராக 3 ஆண்டுகள் அனுபவமுள்ள நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 89034-18128 என்ற எண்ணிலோ இணையதளத்தைப் பாா்வையிட்டோ தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.