தேசிய நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
ஆசிரியர்
பணியில் இருந்து இந்திய
நாட்டிற்கே குடியரசுத் தலைவராக
உயர்ந்தவர் சர்வபள்ளி ராதா
கிருஷ்ணன் அவர்கள். அவரது
சிறப்பான பணியினை போற்றும்
வகையில் அவரது பிறந்த
நாளான செப்டம்பர் 5ம்
தேதி தேசிய ஆசிரியர்
தினமாக வருடம் தோறும்
சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இவரை
பெருமைப்படுத்தும் விதமாக
இவரது பெயரில் நாட்டில்
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது
வழங்கி மத்திய அரசு
கௌரவிக்கும். நடப்பு ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க மத்திய
அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 1ம்
தேதி முதல் ஜூன்
20ம் தேதி வரை
ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய
அரசு இதற்காக https://nationalawardstoteachers.education.gov.in/
என்ற இணையதள முகவரியை
வெளியிட்டுள்ளது.
தகுதியுடைய ஆசிரியர்கள் இந்த இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போதைய
கொரோனா கால போராட்டத்தில் மாணவர்களின் நலனுக்காக உழைக்கும்
ஆசிரியர்களையும் முன்கள
பணியாளர்களாக அறிவிக்க
கோரிக்கைகள் எழுந்து வருவது
குறிப்பிடத்தக்கது.