பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாலை நேர
பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அரியாங்குப்பம், பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாலை
நேர கலை பயிற்சி
வகுப்புகளில் சேர
விரும்புவோர், 28ம்
தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கூட முதல்வர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பல்கலைக்கூடத்தில் 6 மாத பயிற்சியாக, மாலை 5.30 மணி முதல்
இரவு 8.30 மணி வரை
ஓவியம், வாய்ப்பாட்டு, பரதம்
ஆகிய வகுப்புகள் வரும்
மார்ச் 1ம் தேதி
முதல் துவங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் சேரலாம். விருப்பம் உள்ளவர்கள் பல்கலைக் கூடத்தில் ரூ.50
செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்
கொள்ளலாம். பூர்த்தி செய்த
விண்ணப்பங்களை வரும்
28ம் தேதிக்குள் பல்கலைக்
கூடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.