M.Ed படிப்புக்கான மாணவர்
சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பொறியியல்
கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள 6 கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகளின் மூலம்
நடத்தப்படும், முதுநிலை
கல்வியியல் பட்டப்படிப்பு படிப்பில்
இந்த ஆண்டுக்கான மாணவர்
சேர்க்கை தொடங்க உள்ளதாக
கூறப்படுகிறது.
இது குறித்து கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்:
தமிழகத்தில் இயங்கி வரும் அரசு
கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளில் 6 கல்லூரிகளில் M.Ed பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது எனவும் M.Ed படிப்புகளில் சேர
விரும்பும் மாணவர்கள், இன்று
முதல் 13ம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள்
www.tngasaedu.in மற்றும்
www.tngasaedu.org எனும்
இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.
இணையதளம்
மூலம் விண்ணப்பிக்க இயலாத
மாணவர்கள் அருகில் உள்ள
கல்வியியல் கல்லூரியின் உதவி
மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பதிவு
செய்ய விண்ணப்பக் கட்டணமாக
ரூ.60 செலுத்த வேண்டும்
என்றும் SC/ST பிரிவினர் பதிவு
கட்டணமாக ரூ.2 செலுத்த
வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய
044-28260098 என்ற எண்ணிற்கு தொடர்பு
கொள்ளலாம்.