TAMIL
MIXER EDUCATION.ன்
விருது
செய்திகள்
புத்தாக்க அறிவியல்
ஆய்வு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்நாடு
அறிவியல் தொழில்நுட்ப மையம்,
சார்பில் நடப்பாண்டுக்கான புத்தாக்க
அறிவியல் ஆய்வு விருதுக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு
அறிவியல் தொழில்நுட்ப இயக்கம்
வெளியிட்ட அறிக்கை:ஆறு
முதல் பத்தாம் வகுப்பு
வரை பயிலும் மாணவர்களின் பெயரை, பள்ளி ஆசிரியர்கள் https://www.inspireawards-dst.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிட
வேண்டும்.
உயர்நிலை,
மேல்நிலை பள்ளிகள் வகுப்புக்கு ஒருவர் என, ஐந்து
பேர், நடுநிலைப்பள்ளிகள் ஒரு
வகுப்புக்கு ஒருவர் என,
மூன்று பேரும் பதிவு
செய்யலாம். கூடுதலாக பதிவு
செய்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
வங்கிக்கணக்கு எண் பதிவிடும் போது,
வங்கிக்கணக்கு மாணவரின்
பெயரில் தனி கணக்காக
இருக்க வேண்டும். வங்கிக்கணக்கு தொடர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும்.
கணக்கு
எண், வங்கியின் பெயர்,
ஐ.எப்.எஸ்.சி.,
கோடு முதலியவற்றை பிழையின்றி குறிப்பிடுவது அவசியம்.
E-Mail, Mobile Phone ஆகியவற்றை குறிப்பிடும் போது, பள்ளி E-Mail, பள்ளி தலைமை ஆசிரியரின் மொபைல்போன் எண்ணை தெளிவாக
குறிப்பிடுவது அவசியம்.
புத்தாக்க
அறிவியல் ஆய்வு விருதுகள்
பற்றிய தகவல், இந்த
இ–மெயிலுக்கே அனுப்பப்படும். செப்., 30ம் தேதி
வரை இணையதளத்தில் பதிவிடலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here