என்டிஏ.வில்
காலியிடங்களுக்கு விண்ணப்பம் – மார்ச் 16 வரை அவகாசம்
NEET,
JEE உள்ளிட்ட நாட்டின்
பல்வேறு முக்கிய நுழைவுத்
தேர்வுகளை தேசிய தேர்வு
முகமை (NTA) நடத்துகிறது. தன்னாட்சிஅந்தஸ்து பெற்ற
இந்த அமைப்பில் உள்ள
காலி பணியிடங்களை பிரதிநிதித்துவம், குறுகிய கால
ஒப்பந்தம், 3 ஆண்டு கால
ஒப்பந்தம் ஆகிய அடிப்படையில் நிரப்பகடந்த ஜனவரி 20-ம்
தேதி அறிவிப்பு வெளியானது.
குரூப்–ஏ
பிரிவில் 18, குரூப்–பி
பிரிவில் 24, குரூப்–சி
பிரிவில் 16 என மொத்தம்
58 காலி பணியிடங்கள் உள்ளன.
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முதல்கட்டமாக கடந்த
பிப்ரவரி 18-ம் தேதி
வரை அவகாசம் வழங்கப்பட்டது. பிறகு, இது மார்ச்
5-ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், விண்ணப்ப அவகாசத்தை மார்ச்
16-ம் தேதி வரை
மேலும் நீட்டித்து என்டிஏ
அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணியிடங்களுக்கான கல்வித் தகுதி,
வயது வரம்பு உள்ளிட்ட
விவரங்கள் தேசிய தேர்வு
முகமையின் இணையதளத்தில் (www.nta.ac.in) வெளியிடப்பட்டுள்ளது.