HomeBlogஅவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – Last Date: Jan 5, 2022
- Advertisment -

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – Last Date: Jan 5, 2022

Anyone can apply for the award - Last Date: Jan 5, 2022

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Last Date: Jan 5, 2022

உலக
மகளிர் தினவிழாவை முன்னிட்டு வழங்கப்படவுள்ள அவ்வையார்
விருதுக்கு தகுதியானவா்கள் ஜனவரி
5
ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது:

பெண்களின்
முன்னேற்றத்திற்கு சிறந்த
சேவை புரிந்த ஒருவருக்கு 2021-2022 ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது 08.03.2022 உலக
மகளிர் தின விழாவில்
தமிழக முதல்வா் மூலம்
வழங்கப்பட உள்ளது. இந்த
விருதுக்கு ரொக்க பரிசு,
தங்கப்பதக்கம், சான்று
மற்றும் சால்வை வழங்கப்படும்.

தமிழகத்தை
பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு
மேற்பட்டவராகவும் இருக்க
வேண்டும். சமூகநலன் சார்ந்த
நடவடிக்கைகள், பெண்
குலத்திற்கு பெருமை சோக்கும்
வகையிலான நடவடிக்கை, மொழி,
இனம், பண்பாடு, கலை,
அறிவியல், நிர்வாகம் போன்ற
துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில்
தொடா்ந்து பணியாற்றுபவராக இருக்க
வேண்டும்.

விண்ணப்பதாரரின் கருத்துரு (தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில்), 2 புகைப்படத்துடன் புத்தக வடிவில் அனுப்பப்பட வேண்டும். இரண்டு (அசல்-1
மற்றும் நகல்-1) கருத்துருக்கள் என்ற வகையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல
அலுவலகத்தில் 05.01.2022ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -