தமிழகத்தில் 10, 11ம்
வகுப்பு பொதுத்தேர்வு குறித்த
அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும்
11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை
குறித்து கல்வித்துறை செயலாளர்
அவர்கள் புதிய அறிவிப்பு
ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள்
கடந்த மார்ச் மாதம்
முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் ஜனவரி
மாதம் 19 ஆம் தேதி
முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 9 மற்றும் 11 ஆம்
வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி
மாதம் 8 ஆம் தேதி
முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
மற்ற
1 முதல் 8 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு ஆன்லைன்
மூலமாக வகுப்புகள் மற்றும்
தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 11 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு தேர்வுகள்
ரத்து செய்வது குறித்து
அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 3 ஆம் தேதி
முதல் நடைபெறும் என
தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை ஏற்கனவே 40% குறைக்கப்பட்ட நிலையில்
மீண்டும் குறைக்க வேண்டும்
என கோரிக்கை வைக்கப்பட்டது.
தற்போது
கல்வித்துறை செயலாளர் அனைத்து
மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்களுக்கும் புதிய
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல்
8 ஆம் வகுப்பு வரை
உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன்
மூலமாக வகுப்புகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டது. 10 மற்றும்
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்த அறிவிப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பின்
அறிவிக்கப்படும்.