அன்னை வந்தனைத்
திட்டம் பேறுகாலப் பயன்
ரூ.6,000 வழங்கப்படுகிறது
பேறுகாலப்
பயன் ரூ.6,000 இரண்டாவது
குழந்தைக்கும் வழங்கப்படுகிறது.
ஆனால்
இது பெண் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது மத்திய
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின்
அன்னை வந்தனைத் திட்டம்,
மத்திய அரசின் நேரடிப்
பணபரிமாற்ற திட்டம். இத்திட்டம் வெளிப்படையாகவும், திறம்படவும் இணைய மேலாண்மை தகவல்
மென்பொருள் மூலம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ்
மகப்பேறு பயன்கள் மாநிலங்கள் பராமரிக்கும் வங்கிக்
கணக்கில் நேரடியாக வெளிப்படையான முறையில் செலுத்தப்படுகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் அதிகாரம்
அளிக்க, சக்தித் திட்டம்
சமீபத்தில் தொடங்கப்பட்டது.
மேலும்,
பேறுகாலப் பயன் ரூ.6,000
இரண்டாவது குழந்தைக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் இது பெண்
குழந்தைகளுக்கு மட்டுமே
வழங்கப்படுகிறது.
பெண்கள்
மேம்பாட்டுக்கு சக்தித்
திட்டத்தின் கீழ் சாமர்த்தியா என்ற ஒருங்கிணைந்த துணைத்
திட்டமும் உள்ளது.
இதில் உஜ்ஜாவாலா,
ஸ்வாதர் கிரஹ், வேலைபார்க்கும் பெண்களுக்கான விடுதி,
வேலைபார்க்கும் பெண்களின்
குழந்தைகளுக்கான தேசியக்
காப்பகம் திட்டம் மற்றும்
பிரதமரின் அன்னை வந்தனைத்
திட்டம் ஆகியவை அடங்கியுள்ளன. சாமர்த்தியா திட்டத்தின் ஒவ்வொரு
அம்சத்துக்கும் சிறப்பு
ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பிரதமரின்
அன்னைவந்தனைத் திட்ட
அமலாக்கத்துக்கு சாமர்த்தியா திட்டத்தின் கீழ் போதிய
பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என மத்திய அமைச்சர்
தெரிவித்துள்ளார்.