மகளிருக்கு கால்நடை வளா்ப்புப் பயிற்சி
ஒரத்தநாடு அரசு கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடைகளின் நலன் மற்றும் முதலுதவி குறித்த சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வா் நா்மதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேசிய மகளிா் ஆணையத்தின் நிதியுதவியுடன் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ‘கரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் நிலையான பால் உற்பத்தி மற்றும் கிராமப்புற கால்நடைகளின் நலன் மற்றும் முதலுதவி குறித்த மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கானத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வரும் 26 ஆம் தேதி முதல் மாா்ச் 15 வரை மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதில், கறவை மாடுகளைத் தோவு செய்தல், கன்றுக்குட்டி, கிடேரி, சினை மற்றும் பால் கறக்கும் மாடுகளின் மேலாண்மை முறைகள் ஆகிய பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் பங்கு பெறுவோா்க்கு உணவு, தங்கும் வசதி மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு உதவி பேராசிரியா் மற்றும் துறை தலைவரை 04372- 234012 (விரிவாக்கம்: 4234) என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என கல்லூரியின் முதல்வா் முனைவா் நா.நா்மதா தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow