சர்வதேச உயிரியல்
பல்லுயிர் பெருக்க நாளை
முன்னிட்டு
இணையவழி வினாடி வினா
சர்வதேச
உயிரியல் பல்லுயிர் பெருக்க
நாளை முன்னிட்டு, இணையவழி
வினாடி வினா மற்றும்
இரவு வான் நோக்கும்
நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.உடுமலை
கலிலியோ அறிவியல் கழகத்தின்
சார்பில், சர்வதேச உயிரியல்
பல்லுயிர் பெருக்க தினத்தையொட்டி, இணையவழி வினாடி வினா
போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியானது, நாளை மாலை, 5.30 முதல்,
6.00 மணி வரை நடத்தப்படுகிறது. இதில், பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவம், மேற்கு
தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அரிய வகை
உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து வினாக்கள் இடம்பெறவுள்ளது.இப்போட்டியில், 6ம்
வகுப்பு முதல் கல்லுாரி
வரை படிக்கும் மாணவர்கள்
கலந்து கொள்ளலாம்.
அதற்கு,
8778201926
வாட்ஸ்ஆப் எண், galilioscienceclub@gmail.com என்ற
இமெயில் முகவரியில் பதிவு
செய்ய வேண்டும்.அவர்களுக்கு மட்டுமே அதற்கான இணைப்பு
அனுப்பப்படும்.
மேலும்,
வரும், 23ல், காந்தி
நகர் அருகில் உள்ள
செல்லம் நகரில், இரவு,
7.00 முதல் 9.00 மணி வரை
வான் நோக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.