மத்திய அரசு
ஊழியர்கள் அனைவரும் கொரோனா
தடுப்பூசி செலுத்திக் கொள்ள
வேண்டும்
இந்தியாவில் CORONA பரவலின் இரண்டாம்
அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு
நாளும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக
உயர்ந்து வருகிறது. அதன்படி
நேற்று மட்டும் நாடு
முழுவதும் 96 ஆயிரம் பேர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே
நேரத்தில் கொரோனா தடுப்பூசி
போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது.
ஜூன்
மாதத்துக்குள் இந்தியா
முழுவதும் 30 கோடி பேருக்கு
தடுப்பூசி போடப்பட வேண்டும்
என மத்திய அரசு
அறிவித்துள்ளது. முன்னதாக
ஜனவரி 16 ஆம் தேதி
முதல் தடுப்பூசி போடும்
பணிகள் நடந்து வருகிறது.
2 லட்சம் சுகாதார ஊழியர்கள்,
கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி
போடப்பட்டது. பின்பு 60 வயதுக்கு
மேற்பட்டவர்கள், இணைநோய்
உள்ளவர்களுக்கு இரண்டாம்
கட்ட கொரோனா தடுப்பூசி
போடப்பட்டுள்ளது.
தற்போது
45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்
தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்
என மத்திய அரசு
அனுமதி அளித்துள்ளது. அதன்படி
45 வயது நிரம்பிய மத்திய
அரசு ஊழியர்கள் அனைவரும்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என
மத்திய அமைச்சகங்கள் மற்றும்
மத்திய துறைகளுக்கு அரசு
சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.