TAMIL MIXER
EDUCATION.ன்
விமான செய்திகள்
சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல விமான கட்டணம் ரூ. 6000 வரை உயர்வு
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு நாடு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் விமான போக்குவரத்து எவ்வித சிக்கலும் இல்லாமல் வழக்கம் போல நடைபெற்று வருகிறது.
இன்னும் 2 மாதங்களில் கோடை விடுமுறை வர உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா தலங்கள் மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதிலிருந்து விமான டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெளிநாடு மற்றும் கோவா, டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கான விமான கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல விமான கட்டணம் ரூ. 6000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே போல சென்னையில் இருந்து துபாய் செல்வதற்கான கட்டணம் ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து சென்னை– கோவா கட்டணம் ரூ.4, 400 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.