AIM TN யூடியூப் சேனலில் TNPSC குரூப் – 4 தேர்வுக்கு இணைய வழி பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், இணையம் வழியே ஒளிபரப்பாக உள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம், குரூப் – 4 தேர்வுகளை விரைவில் அறிவிக்க உள்ளது.
இந்தத் தேர்வை, ஊரகப்பகுதி மாணவர்கள் அதிகம் பேர் எழுத வசதியாக, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரியில், இணையதள பயிற்சி வகுப்புகள், இம்மாதம், 13ம் தேதி துவங்கின. பயிற்சி வகுப்புகள், ‘AIM TN‘ வலைதள பக்கம், ‘யு டியூப்’ சேனலில் ஒளிபரப்பாகின்றன. தேர்வு எழுத உள்ளவர்கள், தங்களிடம் உள்ள ஸ்மார்ட் போன் வழியாக, இந்த இணைய வழி வகுப்பில், இலவசமாக பாடங்களை கற்று, தகுதி தேர்வில் பங்கேற்கலாம். பாடத்திட்டங்களை தொகுதி வாரியாக வடிவமைத்து, தினமும் நடத்தப்படும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரி தேர்வு நடத்தி, அதை மதிப்பீடு செய்து முடிவுகள் வெளியிடப்படும். ஞாயிற்றுக்கிழமை நேரலையில் வினாத்தாள் குறித்த விவாதம் நடக்கும்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow