Sunday, December 22, 2024
HomeBlogமானியம் பெற்று வேளாண் தொழில் முனைவோராக வேளாண்மை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - திருச்சி
- Advertisment -

மானியம் பெற்று வேளாண் தொழில் முனைவோராக வேளாண்மை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் – திருச்சி

Agriculture Graduates can apply to get grant and become agribusiness entrepreneurs - Trichy

TAMIL MIXER EDUCATION.ன்
திருச்சி மாவட்ட செய்திகள்

மானியம் பெற்று
வேளாண் தொழில் முனைவோராக
வேளாண்மை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
திருச்சி

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாண்
தொழில் முனைவோர் திருச்சி
மாவட்ட வேளாண்மை மற்றும்
உழவா் நலத் துறை
மூலம் 2022-2023ம்
நிதியாண்டில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம
ஒருங்கிணைந்த வேளாண்
வளா்ச்சித் திட்டம் மற்றும்
அண்ணா மறுமலா்ச்சி திட்டம்
செயல்படுத்தப்படும் 108 கிராம
பஞ்சாயத்துகளில் வேளாண்
தொழில் முனைவோராகலாம்.

இத்திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை,
தோட்டக்கலை மற்றும் வேளாண்மை
பொறியியல் பட்டம் பெற்ற
21
வயது முதல் 40 வயதுக்குட்டபட்ட அரசு மற்றும் தனியார்
நிறுவனத்தில் பணியில்
இல்லாத சிறந்த கணினி
புலமையுள்ள வேளாண்மை தொடா்புடைய செயலிகளை பயன்படுத்தும் திறனுள்ள
பட்டதாரிகள் 6 பேர் வேளாண் தொழில் முனைவோராக
செயல்பட அரசாணை பெறப்பட்டுள்ளது.

இதன்
மூலம் பயனாளி தனது
மூலதனத்தில் வேளாண் மற்றும்
வேளாண் சார்ந்த பிரதமரின்
உணவுப் பதப்படுத்தும் குறு
நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்,
வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின்
கீழ் அனுமதிக்கக் கூடிய
திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்களை நிறுவ
வேண்டும். இதற்கு உட்கட்டமைப்பு நீங்கலாக அதிகபட்சமாக ரூ.1
லட்சம் பின்னேற்பு மூலதன
மானியமாக வழங்கப்படும்.

எனவே
தகுதியான பட்டதாரிகள் 10 மற்றும்
12
ம் வகுப்பு மதிப்பெண்
சான்றிதழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பிரிவில்
இளநிலைப் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ்,
உத்தேசித்துள்ள தொழில்
தொடா்பான விரிவான திட்ட
அறிக்கை, ஆதார், குடும்ப
அட்டை நகல், வங்கி
கணக்கு நகல் மற்றும்
வங்கியில் கடனுதவி பெற்று
திட்டம் தொடங்குபவா் எனில்
அதற்கான ஆவணங்களுடன் கூடிய
விண்ணப்பத்தை அக்ரிஸ்நெட் வலைதளத்தில் பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும். வரும் செப்.
2
ம்(02.09.2022) தேதி
கடைசி நாளாகும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -