வேளாண் பல்கலை
மாணவர் சேர்க்கை –
விண்ணப்பிக்க தேதி
நீட்டிப்பு
கோவையில்
உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்
பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட 12 பட்டப்படிப்புகள் 18 உறுப்புக்
கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக்
கல்லூரிகள் மூலம் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
நடப்பு
கல்வி ஆண்டில் (2021 – 2022) இளங்கலைப்
பிரிவில் சேரமாணவர் சேர்க்கை
விண்ணப்பங்கள் கடந்த
மாதம் 8ம் தேதி
முதல் ஆன்லைன் வாயிலாக
பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க அக்.7ம் தேதி
கடைசிநாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதி வரும் 18-ம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். நவ.2ல்
தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.