விவசாயிகளுக்கு இலவச
பயிற்சி அளிக்கும் வேளாண்
பட்டதாரி
பயிற்சி அளிக்கும் வேளாண்
பட்டதாரி
கொட்டாம்பட்டி அருகே உதினிப்பட்டியில் தரம்
உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிகள் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சியளித்து வருகிறார்
வேளாண் பட்டதாரி அருணாச்சலம் (33).
இவர்
ஐந்திணை வேளாண் கல்வி
மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் இயற்கை விவசாயம்,
கால்நடை பராமரிப்பு மற்றும்
வேளாண் பொருட்களை மதிப்புகூட்டி விற்பனை செய்வது தொடர்பாகவிவசாயிகளுக்கு இலவசமாக பயிற்சி
அளித்து வருகிறார்.
விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த
ஏதுவாக மாத வருமானத்திற்கு கறிக்கோழிகள், தினசரிவருமானத்திற்கு முட்டை கோழி,
வார வருமானத்திற்கு கோழிக்குஞ்சுகள் வளர்ப்பு என மூன்று
வகையாக பயிற்சி அளித்தும்
வருகிறார்.அருணாச்சலம் கூறியது:
நாட்டுக்கோழிகள் ஆண்டுக்கு
120 முட்டைகள் இடும். தரம்
உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிகள் ஆண்டுக்கு 350 முட்டைகள் இடும்.
இக்கோழிகள் 18 வது வாரத்தில் முட்டையிட
துவங்கும். திறந்த வெளியில்
வளர்ப்பதை விடகூண்டு முறையில்
கோழிகளை வளர்க்கும் போது
முட்டைகள் அதிகம் கிடைக்கிறது.கோழிகளை வளர்க்க குறைந்த
இட வசதி போதும்.
நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்க, எச்சங்களில் துர்நாற்றம் வருவதை தடுக்க குடிநீரில் பஞ்சகாவியம் கொடுக்கவேண்டும்.
சத்துணவு
திட்ட தேவைக்கு முட்டையை
கொள்முதல் செய்ய அறக்கட்டளை ஏற்பாடு செய்து தருகிறது
என்றார். இவரை தொடர்புகொள்ள 88839 39399.