2023 -24ம் ஆண்டுக்கான அக்னிவீரர் தேர்வுக்கான அறிவிப்பை திருச்சிராப்பள்ளி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இருந்து திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
அக்னிவீர் ஜெனரல், அக்னீவீர் தொழில்நுட்பம் (agniveer Technical), அக்னிவீர் கிளர்க்/ஸ்டார் கீப்பர் தொழில்நுட்பம், அக்னீவீரர் டிரேட்ஸ்மேன், அக்னீவீரர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Selection Procedure: ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதற் கட்டமாக ஆன்லைன் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆட்சேர்ப்பு பேரணிக்கு (Recruitment Rally) அழைக்கப்படுவர்கள். ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மார்ச் 15ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்த இணைப்பில் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place


