Sunday, December 22, 2024
HomeBlogதமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான வயது வரம்பு – TRB தலைவர் பதிலளிக்க உத்தரவு
- Advertisment -

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான வயது வரம்பு – TRB தலைவர் பதிலளிக்க உத்தரவு

 

Age limit for post graduate teachers in Tamil Nadu - TRB Chairman orders to respond

தமிழகத்தில் முதுகலை
பட்டதாரி ஆசிரியர்களுக்கான வயது
வரம்பு – TRB தலைவர் பதிலளிக்க
உத்தரவு

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம்
மூலமாக நடத்தப்படும் தேர்வுகளுக்கு இதுவரை வயது வரம்பு
எதுவும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான வயது வரம்பை
TRB
வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணிநியமனம் செய்யப்படமாட்டாது என
தெரிவிக்கப்பட்டது. இந்த
அறிவிப்பிற்கு எதிர்ப்பு
தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவர் தொடந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளவை,

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை
கடந்த 11 ஆம் தேதி
TRB
வெளியிட்டது. அதில் 40 வயதிற்கு
மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது என தெரிவித்தது.

ஏற்கனவே
2011
ஆம் ஆண்டு முதல்
5
ஆண்டுகள் தொடர்ந்து தேர்வு
எழுதி இறுதியில் கடந்த
ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று பணி
அனுபவம் இல்லாத காரணத்தால் மதிப்பெண் இழந்தேன். இந்நிலையில் தற்போது இந்த பணிகளுக்கும் புதிதாக வயது வரம்பு
நிரநயிக்கப்பட்டுள்ளது. இதன்
காரணமாக முறையாக பயிற்சி
பெறாதவர்களும் பணி
நியமனம் வழங்கப்படுவார்கள். இதனால்
மாணவர் சமுதாயம் பெரிதும்
பாதிக்கப்படும்.

எனவே
புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த
வயது வரம்பு அறிவிப்பை
மாற்றி புதிய அறிவிப்பு
வெளியிட உத்தரவிட வேண்டும்.

இந்த
வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தலைவர் பதிலளிக்க
வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 8 ஆம்
தேதிக்கு ஒத்தி வைப்பதாக
உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -