மத்திய அரசு
ஊழியர்களுக்கான முன்பணம்
– மார்ச் 31 கடைசி நாள்
2020-ஆம்
ஆண்டு மார்ச் மாதம்
முதல் CORONA தாக்கம்
நாடு முழுவதும் உள்ள
மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதன் காரணமாக நாட்டின்
பொருளாதார நிலைமையும், மக்களின்
வருமானமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய
அரசு ஊழியர்களுக்கு பண்டிகை
காலத்தில் செலவுகள் அதிகமாக
உள்ள காரணத்தால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில்
மத்திய அரசு புதிய
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய
அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே
ஆறாவது ஊதியக் குழுவின்
கீழ் சிறப்பு முன்பணமாக
ரூ.4500/- வழங்கப்பட்டது. அதனை
ஏழாவது ஊதியக்குழு மூலமாக
அதிகரித்து ரூ.10,000/- வழங்கப்பட்டது. முன்பணமாக வழங்கும் தொகைக்கு
ஊழியர்களிடம் இருந்து
எந்த வட்டியும் வசூலிக்கப்படவில்லை. மேலும் இந்த
தொகையை மாதம் ரூ.1000மாக
10 மாதங்களில் திருப்பி தரலாம்.
மத்திய
அரசு ஊழியர்கள் இந்த
திட்டத்தை பயன்படுத்த விண்ணப்பிக்க மார்ச் 31-ஆம் தேதி
கடைசி நாள் ஆகும்.
இந்த தொகை முன்கூட்டியே வங்கிக்கணக்கில் டெபாசிட்
பெறப்படும். ஏற்கனவே கொரோனா
காலத்தில் மத்திய அரசு
ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ரத்து செய்துள்ளது.