பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் 2024- 25 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் க.கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், பெரம்பலூா், ஆலத்தூா் மற்றும் குன்னம் ஆகிய பகுதிகளில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களும், 3 தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இதில், 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி பெற 8 மற்றும் 10 வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் https://skilltraining.tn.gov.in/ எனும் இணையதளத்திலும், நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோா் ஜூன் 7 ஆம் தேதிக்குள் ரூ. 50 ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மாணவா்கள் 14 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு வயது வரம்பு ஏதுமில்லை.
பற்றவைப்பவா், தொழில் பிரிவுக்கு 8 ஆம் வகுப்பும், இதர பிரிவுகளுக்கு 10 ஆம் வகுப்பும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு வேலை நாள்களில் சம்பந்தப்பட்ட அரசினா் தொழில் பயிற்சி நிலையத்தில் செயல்படும் உதவி சோ்க்கை மையம் மூலமாக நேரில் சென்று விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.
ஐ.டி.ஐ-ல் சேரும் மாணவ மாணவிகளுக்கு சீருடை, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், பேருந்து பயண அட்டை மற்றும் பயிற்சிக்குத் தேவையான நுகா் பொருள்கள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், மாதம்தோறும் ரூ. 750 உதவித் தொகையும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ. 1,000 உயா்கல்வி உதவித்தொகை வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் தொழில்பயிற்சி நிலையத்தை 94438 52306, 90479 49366, 63797 64520 ஆலத்தூா் தொழில்பயிற்சி நிலையத்தை 94990 55883, 94990 55884 மற்றும் குன்னம் அரசு தொழில்பயிற்சி நிலையத்தை 98946 97154, 98406 63297, 63790 02729 ஆகிய எண்களிலும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 94884 51405 எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow