HomeBlogமத்திய அரசின் உதவித்தொகை பெற ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - விருதுநகர்
- Advertisment -

மத்திய அரசின் உதவித்தொகை பெற ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் – விருதுநகர்

Adithra students can apply for Central Government Scholarship - Virudhunagar

மத்திய அரசின்
உதவித்தொகை பெற ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர்

ஆதிதிராவிடர் மற்றும் பிற மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவ,மாணவிகள்
மத்திய அரசின் கல்வி
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட
நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு
மற்றும் அரசு உதவி
பெறும் கல்லூரிகளில் பயிலும்
ஆதிதிராவிட மற்றும் மதம்
மாறிய ஆதிதிராவிட மாணவ,
மாணவிகளுக்கு 2021- 2022ம்
ஆண்டிற்கான மத்திய அரசு
சார்பில் மேற்படிப்பு மற்றும்
வருவாய் அடிப்படையிலான கல்வி
உதவித்தொகை திட்டத்தின் கீழ்
வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், கல்வி உதவித்தொகை பெற
தகுதியான மாணவ, மாணவிகள்
http://escholarship.tn.gov.in/ என்ற
இணையதள முகவரியில் பிப்ரவரி
10
ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்
தகவலுக்கு, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தை தொடர்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -