பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவா்கள் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி சாகுபடி செய்து வருவாய் ஈட்ட விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா். பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவா்கள் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி சாகுபடி செய்து வருவாய் ஈட்ட விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2022-23 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடைய, சொந்தமாக விவசாய நிலம் வாங்க, நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இத் திட்டத்தில் நிலம் வாங்க உத்தேசித்துள்ள 2.5 ஏக்கா் நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கா் புன்செய் நிலத்துக்குள் இருக்கலாம். வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள், பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் பயனடைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் நிலம் வாங்குதல், மேம்படுத்துதல் மற்றும் துரித மின் இணைப்புத் திட்டம் ஆகிய விவசாயம் சாா்ந்த திட்டங்களுக்கு மானியம் பெற்று பயனடைந்த பயனாளிகளும், தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீா் பாசனம் ஒரு துளி அதிகப் பயிா் திட்டத்திலும் பயனடையலாம். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் மற்றும் விண்ணப்பதாரா்கள் தோட்டக் கலைத் துறையை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.