TAMIL MIXER
EDUCATION.ன்
விவசாய செய்திகள்
கரும்பு விவசாயிகளுக்கு
கூடுதல்
ஊக்கத்தொகை
தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு
ஊக்கத்தொகை
வழங்க
நடவடிக்கை
எடுக்கப்பட்டு
வருவதாக
அரசு
அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் கரும்பு மகசூலை அதிகப்படுத்தவும்,
சர்க்கரை
ஆலைகளின்
திறனை
மேம்படுத்தவும்
தமிழக
முதல்வர்
ஸ்டாலின்
பல்வேறு
விதமான
நடவடிக்கைகளை
எடுத்து
வருகிறார்.
கடந்த 2020-2021ம் ஆண்டில் அரவைப் பருவத்திற்கு
ஒன்றிய
அரசு
நிர்ணயித்த
2707.05 ரூபாயை
விட
கூடுதல்
ஊக்கத்தொகையாக
டன்
ஒன்றிற்கு
192.50 ரூபாய்
வழங்கப்படுவதால்
விவசாயிகளுக்கு
2,900 ரூபாய்
கிடைக்கிறது.
அதன்
பிறகு
கடந்த
2020-2021ம்
ஆண்டில்
95,000 எக்டேராக
இருந்த
கரும்பு
பதிவு
2022-2023ம்
ஆண்டில்
1,40,000 எக்டேராக
இருப்பதோடு
கரும்பு
அரவை
98.66 லட்சம்
மெட்ரிக்
டன்னில்
இருந்து
139.15 லட்சம்
மெட்ரிக்
டன்னாக
அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 2022-2023ம் ஆண்டு ஒன்றிய அரசு கரும்பு ஊக்க தொகையாக அறிவித்த 2755 ரூபாயை காட்டிலும் கூடுதலாக மாநில அரசு ஒரு டன்னுக்கு 195 ரூபாய் வழங்குகிறது. கடந்த 7ம் தேதி அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைகள் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு
சிறப்பு
ஊக்கத்
தொகை
வழங்கும்
திட்டத்தை
முதல்வர்
தொடங்கி
வைத்தார்.
அதன் பிறகு கரும்பு விவசாயிகளின்
நலனுக்காக
199 கோடி
ரூபாய்
நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால்
2022-2023ம்
ஆண்டில்
தனியார்
மற்றும்
கூட்டுறவு
ஆலைகளில்
பதிவு
செய்துள்ள
கரும்பு
விவசாயிகளுக்கு
ஊக்கத்தொகையாக
டன்
ஒன்றுக்கு
ரூ.
2950 கிடைக்கும்.
இதன்
மூலம்
1.21 லட்சம்
கரும்பு
விவசாயிகள்
பயனடைவார்கள்.