மத்திய அரசு
ஊழியர்களுக்கான அகவிலைப்படி – ஜூன் மாதம் செலுத்த
முடிவு
கடந்த
ஆண்டு CORONA காரணமாக
பல மாதங்களாக ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டது. மக்கள்
வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக
பல நிறுவனங்கள் இயங்கவில்லை, நிறுவனத்தில் உள்ள
ஊழியர்களுக்கு சம்பளம்
வாங்கப்படவில்லை. இதனால்
அரசுக்கு வரி வசூல்
பாதிக்கப்பட்டதால் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதனை
சரி செய்யும் பொருட்டு
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த
4% அகவிலைப்படி உயர்வை நிறுத்தி
வைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் 50 லட்சம் அரசு
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான 3 மாதம் நிலுவையில் உள்ள
தொகையை 2021-ஆம் ஆண்டு
ஜூன் மாதம் வழங்கப்படும் என மத்திய அரசு
அறிவித்தது.
இந்த
அறிவிப்பின் படி ஜூலை
மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு மிக பெரிய நிவாரணம்
கிடைக்கும். அரசு அகவிலைப்படி 3 தவணையாக உள்ளதால் தற்போது
ஒரே தவணையாக அதனை
செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.