காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பாபு கூறியதாவது:காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தலைமை தபால் நிலையம் மற்றும் திருத்தணி, அய்யன்பேட்டை, வாலாஜாபாத், ஏனாத்துார், உத்திரமேரூர் ஆகிய துணை தபால் நிலையங்களில் ஆதார் அட்டை எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில், அனைத்து தரப்பினரும் புதிய ஆதார் அட்டை மற்றும் ஆதார் பதிவேற்றம் உள்ளிட்ட பல வித பணிகள் செய்துக்கொள்ளலாம்.
ஜன.,11ம் தேதி வரையில், தினசரி அலுவலக நேரங்களில் சென்று ஆதார் அட்டை எடுத்து பயன்பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.