TAMIL MIXER EDUCATION.ன்
TNUSRB செய்திகள்
TNUSRB PC பணிக்கு
விண்ணப்பிக்க உள்ளோருக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது
தமிழக
சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காவலர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வை நடத்தி வருகிறது. அந்த
வகையில் கடந்த ஜூன்
மாதம் 444 காவல் உதவி
ஆய்வாளர் (SI) பணியிடத்திற்கான தேர்வு
நடைபெற்றது.
அதனை
தொடர்ந்து கடந்த ஜூன்
30ம் தேதி காவல்துறையில் 3,552 இரண்டாம் நிலைக்
காவலர் பணியிடங்கள் குறித்த
அறிவிப்பு வெளியானது. இந்த
2ம் நிலை காவலர்
தேர்வு ஆயுதப்படை, தமிழ்நாடு
சிறப்புக் காவல் படை,
இரண்டாம் நிலை சிறைக்
காவலர், தீயணைப்பாளர் ஆகிய
பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு முதல் சீருடை
பணியாளர் தேர்வில் தமிழ்
மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூலை 7ம் தேதி
முதல் www.tnusrb.tn.gov.in
என்ற இணையதளம் வாயிலாக
விண்ணப்பிக்கலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை சிறைக்
காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்விற்கு இணைய வழியில் விண்ணப்பிப்பதில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து தேவையான விளக்கங்களை விண்ணப்பதாரர்களுக்கு வழங்க
திருவாரூர் மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவி
மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்
மூலம் TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது
ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம்
பெறலாம்.
இந்த
உதவி மையமானது வருகிற
15ம் தேதி வரை
திருவாரூர் மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டு அலுவலக தரை
தளத்தில் காலை 9.30 மணி
முதல் மாலை 6 மணி
வரை செயல்படும் என்று
தெரிவித்துள்ளார். ஏற்கனவே
நடைபெற்று முடிந்துள்ள காவலர்
ஆய்வு பணிக்கான (SI) தேர்வின்
போதும் இணையதள விண்ணப்ப
பதிவுகள் குறித்த சந்தேகங்களுக்கு அரசு சார்பாக கட்டுப்பாட்டு அறையில் உதவி மையம்
அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடைந்தனர்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here