பிரபல ஐடி நிறுவனத்தில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 2024ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
பயிற்சி காலமாக முதல் 6 மாதத்தில் மாதசம்பளமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அதன்பிறகு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
பிரபலமான ஐடி நிறுவனங்களில் ஒன்றாக RT Camp உள்ளது. இந்த நிறுவனம் என்பது வெப் சொல்யூசன் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி ஆர்டி கேம்ப் நிறுவனத்தில் பைத்தான் இன்ஜினியர் – டிரெய்னி (Python Engineer – Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 2024ம் ஆண்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாஜி துறையில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வோருக்கு எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட், MySQL அடிப்படை புரிதல் இருக்க வேண்டும். python Syntax, Databases, OOP, debugging, frameworks மற்றும் கோலாபோரேட்டிவ் டெவலப்மென்ட்டுக்கான கன்ட்ரோல் சாப்ட்வேர் GiT பற்றி தெரிந்திருக்க வேண்டும். மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை கற்கும் திறமை இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி பேக்கேஜ் மேனேஜர்களான Pip, Poetry, லைப்ரேரிஸ்களான Rich, Pandas, NumPy, பைத்தான் பயன்படுத்தி மெஷின் லேனிங் வொர்க் உள்ளிட்டவற்றில் அனுபவமும், யூனிட் டெஸ்ட்டிங் பிரேம்வொர்க் பற்றிய விபரமும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதுதவிர CPU, RAM, Motherboard உள்ளிட்டவை பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் 3 முக்கிய நோக்கங்களுக்காக பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது பைத்தான் பிரேம் வொர்க் Frappe, Django, Flask, FastAPI பயன்படுத்தி saas Products கொண்டு வர வேண்டும். இஆர்பி நெக்ஸ் (ERPNext)மூலம் இஆர்பி சொல்யூஷன் தெரிந்திருக்க வேண்டும் மேலும் Frappe Marketprace-க்கான ERPNext தெரிந்திருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் RTcamp ஐடி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சென்று ஆன்னைில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் விரைந்து விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணலுக்கு பிறகு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் 6 மாதம் Probation எனும் பயிற்சி காலமாகும். இந்த சமயத்தில் மாதசம்பளமாக ரூ.50 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். இந்த பயிற்சி காலத்தை கடந்து நியமனம் பெறும்போதும் ஆண்டு சம்பளம் குறைந்தபட்சம் ரூ.12 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.18 லட்சம் வரை இருக்கும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் புனேவில் நியமனம் செய்யப்படுவார்கள். பிற ஐடி நிறுவனங்களை போல் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். சனி, ஞாயிறு விடுமுறை தினமாகும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்