பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதூரில் உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், அழகு கலை இலவச பயிற்சி நடக்கிறது.
பெண்களுக்கான இப்பயிற்சி முகாம் இம்மாதம், 10ம் தேதி துவங்கி, தொடர்ந்து, 30 நாட்கள் நடைபெறுகிறது.
பயிற்சியின் போது, தேநீர், மதிய உணவு, சீருடைகள் மற்றும் பயிற்சி உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். தினமும் காலை, 9:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை நடக்கிறது.
பயிற்சியில் சேர வயது, 18 முதல், 45க்குள் இருக்க வேண்டும். பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு மத்திய, மாநில அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு, 94890 43926 என்ற எண்ணை அணுகலாம்.