திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா்அரசினா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் பிரபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் இயங்கி வரும் அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில், 10 மற்றும் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் தவறியவா்களும் விண்ணப்பிக்கலாம்.
ஐடிஐ-யில் பயின்றவா்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்புகள் நல்ல ஊதியத்துடன் பெற்றுத் தரப்படும். கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம். அனைத்து மாணவா்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை ரூ.750 வழங்கப்படுவதுடன், இலவச பேருந்துப் பயண அட்டை, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், சீரூடை, காலணி ஆகியவை வழங்கப்படும்.
மேலும், புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 கூடுதலாக பெற்றுத்தரப்படும். ஆகவே விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் 99428–11559, 86680–41629, 99442–06017 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow