திருவண்ணாமலை அருணச்சலேஸ்வரர் திருக்கோயிலால் நடத்தப்பட்டு வரும் ஓதுவார் பயிற்சி பள்ளி மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி ஆகியவற்றில் உறைவிட கல்வி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்: ஓதுவார் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர குறைந்தபட்சம் 13 வயது முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும். இதன் பயிற்சி காலம் 3 ஆண்டுகள்.
அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர குறைந்தபட்சம் 14 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். இதன் பயிற்சி காலம் ஒரு ஆண்டு. பயிற்சி பெறும் காலத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.4,000 உதவித்தொகையாக வழங்கப்படும். உணவு, உடை, தங்கும் இடம், மருத்துவ வசதி ஆகியவை திருக்கோவிலால் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: சேர்க்கைக்கான விண்ணப்பங்களை திருக்கோவில் அலுவலகத்திலோ அல்லது https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 19
விபரங்களுக்கு:
இ-மெயில்: jceotvm_20343.hrce@tn.gov.in
தொலைபேசி: 04175– 252438 / 7708649129
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow