மதுரை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காஅமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண்மைக்கு அடுத்த படியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்குவதில் ஜவுளித் துறைக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானது.
ஜவுளித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு துணி நூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி, ஆராய்ச்சி சங்கத்தின் மூலம் 10, 12-ஆம் வகுப்பு
முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு (இருபாலருக்கும்) ஸ்பின்னிங், தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியைப் பெற விரும்புவோா் ரரர.பசபஉலபஐகஉந.பச.எஞய.ஐச என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும், துணிநூல் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழில் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள், உற்பத்தி கூட கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ, அந்தத் தொகை தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படும்.
சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் வளா்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை மதுரை மாவட்டத்தில் பயன்படுத்தி, தொழில் வளா்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு துணை இயக்குநா், மண்டல துணிநூல் துணை இயக்குநா் அலுவலகம், 39, விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, மதுரை – 625 014 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 0452–2530020 என்ற தொலைபேசி அல்லது 96595 32005 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow