காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேரக் கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக்கு வரும் ஜூலை 19 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இது குறித்த செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேரக் கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி காலம் ஓராண்டு. இப்பயிற்சி இரு பருவங்களைக் கொண்டது. 10, 12- ஆம் வகுப்பு, பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இப்பயிற்சியில் சேரலாம்.
1.8.2024 முதல் 17 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை, ஜூன் 10- ஆம் தேதி முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை அதிகாரபூா்வ இணையதளமான மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
நேரடியாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க இயலாது. தமிழில் மட்டுமே பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்கான தோ்வை தமிழில் மட்டுமே எழுத வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100-ஐ இணைய வழியாக செலுத்த வேண்டும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்வதுடன் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்த சான்றிதழ் நகல்களையும் சுய ஒப்பமிட்டு மேலாண்மை நிலையத்துக்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும்.
தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்கள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.18,750 முழுவதும் ஒரே தவணையில் இணையவழி மூலம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 5-ஏ. வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிா்ப்புறம், காஞ்சிபுரம் – 631 501 என்ற முகவரியில் நேரில் அல்லது 044 – 27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow