நாளை 09.06.24 அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்….
- தேர்வு மையத்திற்கு செல்வதற்கான நேரம் : 8:00 -8.30 மணி
- சலுகை நேரம் : 9.00 மணி
- OMR விடைத்தாள் வழங்கப்படும் நேரம் : 9.00 மணி
4.வினாத்தொகுப்பு வழங்கப்படும் நேரம் : 9:15 மணி
5.தேர்வு தொடங்கும் நேரம் : 9:30 மணி
6.OMR விடைதாளினை முறையாக கையாளவேண்டும்.
7.OMR விடை தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த A B, C, D, E ன் எண்ணிக்கையை பதட்டமில்லாமல்
எழுதவும்.
8.OMR விடை தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதனை மீண்டும் அழித்து வேறு ஒரு option யை குறிப்பிட வேண்டாம், மேலும் ஒரே கேள்விக்கு இரண்டு option களில் விடைகள் தவறாக குறிப்பிடும் தவறினை செய்யாமல் இருக்க முயற்சிக்கவும்…
9.OMR ல் எக்காரணம் கொண்டு whitner பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்..
10.OMR னை முறையாக கையாண்டு தேர்வு முடிந்தவுடன் ஒருமுறை மீண்டும் சரிபார்த்து வழங்கவும்…
11.OMR விடை தாளில் தங்களது கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும் அதனை சரிபார்த்துக்கொள்ளவும்.
தேர்விற்கு தவறாமல் கொண்டு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள்…
👉1) நுழைவுச்சீட்டு (Hall ticket)
👉2) கருமை நிற பந்து முனை எழுதுகோல் (Black ball poit pen)-4
👉3) அடையாள அட்டை (Aadhar/Driving licence/Pan card/Passport/Voter ID)
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்..
தேர்வின்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான கூறுகள்…..
👉1.அறை கண்ணாகணிப்பாளர் கூறும் தகவல்களை முழுமையாக உள் வாங்குதல்
👉2..நேரமேலாண்மையை பதட்டமில்லாமல் கையாளுவது
👉3.சாதராண கடிகாரம் பயன்படுத்துவது(அறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு பயன்படுத்துவது)
👉4.DIGITAL கடிகாரம் தவிர்த்தல்.
👉5.சாதாரண ஆடை அணிந்து செல்லுங்கள்.
👉6.நுழைவுச்சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்று வர வேண்டும்
👉7.தேர்வு முடிந்தவுடன் நுழைவுச்சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்…
👉8.காலை உணவினை அளவாக எடுத்துக் கொள்ளவும்.
👉9.தேர்விற்கு முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கவும்…
👉10.பதட்டமில்லாமல் தேர்வினை எதிர்கொண்டு அனைத்து கேள்விகளையும் கவனத்துடன் கையாளுங்கள்
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்
அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று தங்களின் கனவு பணியான அரசு பணியை பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow