தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சிகள் ஜூன் 24, 25, 26 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவா் கே. ஜெகதீசன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு குறித்து ஜூன் 24 ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளா்ப்பு குறித்து 25 ஆம் தேதியும், நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்து 26 ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவசப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியமில்லை. மேலும் விவரங்களுக்கு, 04362 – 264665 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடா்பு கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow