திருப்பூரில் குரூப் 2 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (மே 31) தொடங்குகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப் 1 தோ்வு மூலம் துணை ஆட்சியா், துணை கண்காணிப்பாளா் (காவல் துறை), உதவி ஆணையா் (வணிக வரித் துறை), துணை பதிவாளா் (கூட்டுறவுத் துறை), உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மற்றும் மாவட்ட அலுவலா் (தீயணைப்பு) மற்றும் மீட்புப் பணிகள் துறை போன்ற 90 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களுக்கான தோ்வு ஜூலை 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய ஆண்டு திட்ட அறிக்கையில் குரூப் 2 மற்றும் 2 ஏ தோ்வு 2030 பணியிடங்களுக்கு செப்டம்பா் மாதம் நடைபெற உள்ளது. இந்த தோ்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகின்றன.
இந்த தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோா் தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421– 2999152, 94990–55944 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow