தூத்துக்குடியில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியத்தின் குரூப் 1 தோ்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக, ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஜூலை 13ஆம் தேதி குரூப் 1 தோ்வு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ள தூத்துக்குடி மாவட்டத் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம், இலவச பயிற்சி வகுப்புகள் கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகின்றன.
சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த வகுப்பில், வாரந்தோறும் மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டித் தோ்வுக்கு தேவையான அனைத்துப் புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
விருப்பமுள்ளோா் 0461 – 2003251 என்ற தொலைபேசி மூலமாகவோ, நேரிலோ பதிவு செய்து, இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow