பிரபலமான டிசிஎஸ் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (Tata Consultancy Services or TCS). இந்த நிறுவனத்தில் தொடர்ச்சியாக பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் TCS B.Sc Ignite & Smart Hiring-க்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. இதில் TCS B.Sc Ignite மற்றும் TCS Smart Hiring ஆகியவற்றுக்கு தனித்தனியே பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதில் TCS Smart Hiring என்பது முழுக்க முழுக்க IT Role பணியாகும். ஆனால் TCS B.Sc Ignite என்பது TCS Smart Hiring-ல் இருந்து வேறுபட்டதாகும். இந்த 2 பணியை பொறுத்தமட்டில் பிசிஏ, பிஎஸ்சி, B.Voc பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதாவது பிசிஏ, பிஎஸ்சி என்றால் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், டேட்டா சயின்ஸ், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, எலக்ட்ரானிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, பயோ கெமிஸ்ட்ரி உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களும், B.Voc என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதோடு விண்ணப்பம் செய்வோர் இந்த படிப்பை 2023, 2024ல் முடித்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து தேர்வில் தேர்ச்சியடைவோருக்கு டிசிஎஸ் சார்பில் பயிற்சி என்பது வழங்கப்படும். சாப்ட்வேர் என்ஜினியரிங் பணிக்கான பயிற்சிகள் கூட வழங்கப்படும். புதிய தொழில்நுட்பம் மற்றும் முதுகலை பட்டப்படிப்புக்கான வாய்ப்பு வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜுன் மாதம் 24ம் தேதிக்குள்(திங்கட்கிழமை) டிசிஎஸ் நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் தேர்வுக்கு பின் நியமனம் செய்யப்பட உள்ளனர். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு என்பது ஆன்லைனில் நடக்காது. மாறாக தேர்வு மையங்களில் நடத்தப்படும்.
மேலும் இந்த பணியிடங்கள் First Come First Serve முறையில் நிரப்பப்பட உள்ளது. அதாவது ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் முதலில் விண்ணப்பம் செய்வோருக்கு மட்டுமே அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைக்கும். தாமதமாக விண்ணப்பம் செய்யும்போது அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைக்காமல் தூரத்தில் உள்ள தேர்வு மையம் கிடைக்கும் நிலை உருவாகலாம்.
இதனால் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் ilp.support@tcs.com என்ற இ-மெயில் அல்லது ஹெல்ப்லைன் எண்ணான 18002093111 என்பதை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow