TNPSC குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு
திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப்-1 தோ்வுக்கு இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் மே 27 முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் -1 தோ்வு மூலம் துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா், உதவி ஆணையா் (வணிக வரிகள்), கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவேடு, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், மாவட்ட அலுவலா் (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்) உள்ளிட்ட பதவிகளில் 90 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித் தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தோ்வுக்கு பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தோ்வு ஜூலை 13-ஆம் தேதி நடைபெறும்.
இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் பயனடையும் வகையில், திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் மே 27-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள், தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தோ்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன், திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
மேலும், https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மின்னணு பாடக் குறிப்புகள், மின் புத்தகங்கள், போட்டித் தோ்வுக்கான பயிற்சிகள், மாதிரி தோ்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதில் வரும் பாடக்குறிப்புகளை தமிழ், ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow