தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில் சேர்வதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய காதி கிராம தொழில் வாரியம் சார்பில், வரும், அக்., 5ம் தேதி முதல், அக்., 16ம் தேதி வரை தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி திருப்பூரில் நடைபெறுகிறது.
இதில், தங்கத்தின் விலை கணக்கிடுதல், கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் முறை ஆகியன குறித்து பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சியில், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் சேரலாம்.
குறைந்தபட்சம், 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.பயிற்சி முடித்தவர்கள் தேசிய, கூட்டுறவு, தனியார் வங்கிகளில் பணியில் சேரலாம்.
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஐ2ஐ அகாடமியில் இப்பயிற்சி வகுப்பு நடைபெறும். விபரங்களுக்கு 94437 28438 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.