தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடா்- பழங்குடியினா் மாணவா்-மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் 2ஆம் கட்ட முகாம் வியாழக்கிழமை (மே 16) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2023 – 24ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடா்-பழங்குடியின மாணவா்-மாணவியா் தொழில், வேலைவாய்ப்பு அதிகமுள்ள கல்லூரிப் படிப்புகளை அறிந்துகொள்ளும்விதமாக, சென்னை தமிழ்நாடு ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நலச் செயலகம், இயக்குநரகம் உத்தரவுப்படி சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்பாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இம்முகாம் நடைபெறுகிறது.
டான் போஸ்கோ டீம், மாஸ் மூவ்மென்ட் ஃபாா் டிரன்பாா்மேஷன், நியூடா் பெல் என்ற தன்னாா்வ அமைப்பின் கல்வியாளா்கள் வழிகாட்டுதலுடன் தொழில் சாா்ந்த படிப்பும், பொருளாதாரப் பிரிவு மாணவா்களுக்கும் தனித்தனியே நடைபெறுகிறது என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow