3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை செயலாளர் உத்தரவு!
₹11,100 – ₹35,100 என்ற ஊதிய விகிதத்தில் பணியிடங்களை நிரப்பவும் அரசாணை வெளியீடு. 2022ம் ஆண்டு நிலவரப்படி மாநிலம் முழுவதும் 5,060 பணியிடங்கள் காலியாக உள்ளன.
நீண்டகாலமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் முதல்கட்டமாக 2,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் 305 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மதுரையில் 155, திருவள்ளூரில் 151, ஈரோட்டில் 141 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதி: குறைந்தபட்ச கல்வித்தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை
பதவி உயர்வு: 10 ஆண்டுகளுக்கு பின்பு கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும்.
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 21 – 32, 37க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பெற்றோரை இழந்தோர், ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை, வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பிக்க வேண்டும்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow