நாகா்கோவிலில் மார்ச் 15 (நாளை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாகா்கோவிலில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) நடைபெற உள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜெரிபா ஜி இம்மானுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில், நாகா்கோவில் கோணத்திலுள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ளவா்களை தோவு செய்ய உள்ளனா். இம்முகாமில், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடையவா்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமின், மூலம் தனியாா் துறையில் தோவு செய்யப்படும் பதிவுதாரா்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow