சி.சி.டிவி., கேமரா தொழில் பயிற்சி
தேனி தாலுகா அலுவலகம் எதிரில் இயங்கி வரும் கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் கண்காணிப்பு கேமரா நிறுவுதல், பழுதுநீக்குதல், பயிற்சி மார்ச் 20ல் துவங்க உள்ளது.
18 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராமப்புற ஆண்கள், பெண்கள் இப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி, உணவு இலவசம். தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை 13 நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது.
தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை அளிக்கப்படும். விரும்புவோர் தங்களது புகைபடம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றோடு மார்ச் 20க்கு முன் நேரில் முன்பதிவு செய்து பயன் பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி நிலைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow