ஈரோட்டில் மார்ச் 15ம் தேதி இலவச அழகுக்கலை பயிற்சி
ஈரோட்டில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வருகிற 15ம் தேதி முதல் துவங்குகிறது.
ஈரோடு கொல்லம்பாளையம் கரூர் சாலையில் உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியானது வருகிற 15ம் தேதி முதல் துவங்கி ஏப்ரல் மாதம் 22ம் தேதி வரை 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
பயிற்சியின்போது சீருடை, உணவு இலவசமாக அளிக்கப்பட்டு, பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் இருப்போர், அவர்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0424 2400338, 87783 23213, 72006 50604 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow