ஆன்லைன் மூலமாக கோடைகால தொழில் பயிற்சி – தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம்
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக தொழில் பயிற்சிகள் மற்றும் தொழில் தொடங்க அனைத்து தேவையான செயல்பாடுகளையும் சேவை மனப்பான்மையில் அனைத்து மாவட்டங்களிலும் செய்து வருகிறது.
அந்த வகையில் வருகிற 6-ந் தேதி முதல் ஆன்லைன் மூலமாக கோடைகால தொழில் பயிற்சியாக ஜூஸ், ஸ்குவாஷ் தயாரிப்பு குறித்து கற்றுத்தரப்பட இருக்கிறது. இந்த பயிற்சி கோடை காலத்தில் தொழில் முனைவுக்கு ஏற்றாற்போல் அனைத்து விவரங்களுடன் கற்றுத்தரப்படும்.
இந்த பயிற்சியில் எவ்வாறு உணவு பாதுகாப்பு தரச் சான்றிதழ் பெறலாம் என்பதில் இருந்து ‘ஜூஸ்’ மற்றும் ‘ஸ்குவாஷ்’ தயாரிப்புக்கு தேவையான அளவுகள், மூலப்பொருட்கள் தேர்ந்தெடுக்கும் முறை, அவற்றை கையாளும் விதம் மற்றும் ‘பேக்கிங்’ செய்யும் விதம், விலை நிர்ணயம் செய்யும் முறை, ‘மார்க்கெட்டிங்’ செய்யும் இடம் ஆகியவற்றை கைதேர்ந்த வல்லுனரால் கற்றுத்தரப்பட உள்ளது.
மேலும் மகளிருக்கான சிறு, குறு தொழில்களுக்கான வங்கி கடன்கள் சேவை மனப்பான்மையுடன் செய்து தரப்படும். கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கான கைத்தொழில் மற்றும் பயிற்சிக்கும் எங்களை தொடர்பு கொள்ளலாம். இந்த பயிற்சியில் பங்கேற்க 9361086551, 7871702700 என்ற எண்களுக்கு குறுந்தகவல் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow