TNTET தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு
தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TN TRB) நடத்தப்படும் TN TET தேர்வு வாயிலாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆசிரியர் தகுதித் தேர்வானது Paper I, Paper II என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். இந்த வகையில் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான TN Tet தேர்வுக்கான அறிவிப்பானது 24.07.2022 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து Paper I தேர்வானது 14.10.2022 அன்று முதல் 20.10.2022 அன்று வரையும், Paper II தேர்வானது 03.02.2024 அன்று முதல் 15.03.2023 அன்று வரையும் நடைபெற்றது. இத்தேர்வுகளுக்கான வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்பானது 22.02.2023 அன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
22.02.2023 அன்று வெளியிடப்பட்ட வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்பை பதிவிறக்கம் செய்ய தவறிய நபர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியமானது முடிவு செய்துள்ளது. இதன் படி, தேர்வர்கள் 01.03.2024 அன்று முதல் 31.03.2024 அன்று வரை 2022 – 2023 ஆம் ஆண்டிற்கென நடைபெற்ற TN TET Paper I மற்றும் Paper II வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வினாத்தாள்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow