கட்டுமான தொழிலாளருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி
கட்டுமான தொழிலாளர்களுக்கு, மூன்று மாத திறன் வளர்ப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது.பொன்னேரி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வரதராஜன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கட்டுமான கழகத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு மூன்று மாதம் மற்றும் ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தொழிலாளர் நல வாரியத்தில், உறுப்பினர்களாக பதிவு செய்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று, 5 – 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., படித்த, 18 – 40 வயதிற்குள் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். கொத்தனார், கம்பி வளைப்பவர், கட்டுமான எலக்ட்ரீஷியன் பயிற்சிக்கு கட்டணம் கிடையாது.
இப்பயிற்சி, வரும் 28ல் துவங்கப்படும். பயிற்சி பெறுவோருக்கு, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும். மூன்று மாத பயிற்சி முடிந்ததும், மற்றொரு ஏழு நாள் பயிற்சி, தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும். பயிற்சியில் பங்கேற்போருக்கு, தினமும் 800 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர் தங்கள் நலவாரிய அட்டை, கல்வி சான்றிதழ், ஆதார் மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன், பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow